யாழில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் ஈச்ச மோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள், மற்றும் இரும்புக் கதவுகள் என்பன இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைத்து சேதம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.