மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிச்சேனை பகுதியில் வீட்டுக்கு அருகில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் பொலிஸார் அவற்றினை மீட்டுள்ளனர்.
அரசடிச்சேனை பகுதியில் நேற்று இரவு உள்ள வயல் வெளியில் நெருப்பு பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து மோட்டார் குண்டொன்று வெடித்து அருகில் உள்ள வளவினுள் வீழ்ந்துள்ளது.
எனினும் குறித்த மோட்டார் குண்டு வெடிக்காத காரணத்தினால் அப்பகுதியில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வவுணதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.தனபாலன் இது தொடர்பில் வவுணதீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த குண்டினை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.