யாழில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறந்துவைப்பு

Report Print Rakesh in சமூகம்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) நினைவு நீச்சல் தடாகம் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நீச்சல் தடாகத்தைத் திறந்து வைத்துள்ளார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதித் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்றைய தினம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.