புணாணை தமிழர் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - மைலந்தனை புணாணை தமிழர் படுகொலை 27ஆம் ஆண்டு நினைவு தினம் மைலந்தனை பொது மக்களால் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.

இதன்போது மைலந்தனை பொது மக்கள் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதுடன், மலர் தூவி ஈகை சுடரேற்றி மௌன இறை வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

1992/08/09 அன்று மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான மைலந்தனை, புணாணையில் இலங்கை இராணுவத்தினால் அப்பாவி தமிழ் உறவுகளை வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.