அருவக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு தனியான கண்காணிப்புக்கு குழு!

Report Print Aasim in சமூகம்

புத்தளம் அருவாக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்தைக் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமனம் செய்யுமாறு நாடாளுமன்ற பொருளாதார விவகாரங்களுக்கான உப கண்காணிப்புக் குழுவினால் பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த கண்காணிப்புக் குழுவில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மற்றும் அதிகாரிகளை நியமிக்குமாறும் குறித்த உபகுழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் கண்காணிப்பு தொடர்பான அறிக்கையை மாதாந்தம் நாடாளுமன்ற உபகுழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொழும்பு நகரில் தேங்கியுள்ள குப்பைகளை 14 டிப்பர் லொறிகளைப் பயன்படுத்தி அருவாக்காடு பிரதேசத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.