இந்திய மீனவர்கள் நிபந்தணையுடன் விடுதலை

Report Print Sumi in சமூகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த மீனவர்களை 5 வருடங்கள் ஒத்திவைத்த இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார் 1ம் திகதி ஒரு விசைப்படகுடன் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மீனவர்கள் (9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.