சாதனை நிலைநாட்டிய கிளிநொச்சி மாணவர்கள்!

Report Print Suman Suman in சமூகம்

சர்வதேச ஒலும்பியா போட்டியில் பங்குபற்றி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை நிலைநாட்டினர். இலங்கைக்கும், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் கிளிநொச்சி வலயத்திற்கும் பெயர் பெற்று தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சி வலய கல்வி பணிமனையில் இடம்பெற்றது.

27 நாடுகள் பங்குகொண்ட குறித்த போட்டியானது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. குறித்த போட்டியில் இலங்கையிலிருந்து 8பேர் பங்குகொண்டதுடன், வடமாகாணத்திலிருந்து மூவர் பங்குபெற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும், கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலிருந்து இருவரும் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், தமிழ் மாணவர்களும் இவர்களாவர் என்பது குறிப்பிடதக்கது.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமரன் அணிசார்பில் வெண்களப்பதக்கத்தினையும், ஆனந் கிருசாந் அணிசார்பில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களை பாராட்டும் நிகழ்வு இன்று பகல்1.30 மணியளவில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கிருஸ்தோபர் கமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம், வலய கல்வி அலுவலக சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.