யாழில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்குதல்

Report Print Murali Murali in சமூகம்

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இரவு 9.30 அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் குடும்பம் வசிக்கும் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.