கிளி. முரசுமோட்டையில் தாக்குதல்! மூவர் படுகாயம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி முரசு மோட்டை மருதங்குளம் பகுதியில் வயல் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பினரால் காணி உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரான பெண் ஒருவர் இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் அதனை இன்று அறுவடைசெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென காணிக்குள் அத்துமீறி உட்புகுந்த முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் காணி உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகன் உறவினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.