ஹக்மன சணச வங்கிக் கிளையில் கொள்ளை!

Report Print Aasim in சமூகம்

ஹக்மன பிரதேசத்தில் சணச வங்கிக் கிளையொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஹக்மன, கம்மெதபிடிய பிரதேசத்தில் உள்ள சணச வங்கிக் கிளையிலேயே இன்று மாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களே வங்கியில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தி கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வங்கியில் இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் செல்லும் ​போது சீசிடிவி கமெரா மற்றும் அதன் பதிவு கருவி என்பவற்றையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.