கண்டியிலிருந்து எல்ல வரை விசேட ரயில் சேவை

Report Print Aasim in சமூகம்

கண்டியிலிருந்து பதுளையின் எல்ல புகையிரத நிலையம் வரை விசேட ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 14ம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை நடைமுறையில் இருக்கும்.

சனிக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் எல்ல நீர்வீழ்ச்சியைக் கண்டுகளிக்க விரும்பும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதியே இந்தப் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.