சடலம் ஒன்றினால் பதற்றமடைந்த பிரதேசம்

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தால் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஹேவாஹெட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றை மலர்ச்சாலை ஊழியர்கள் சிலர் தோண்டி எடுத்து சென்றதாக பரவிய கட்டுகதையினால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் அகால மரணமடைந்தார். ஊர் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட இளைஞன் உயிரிழந்தமையினால் பிரதேசம் மக்கள் மிகவும் கவலை அடைந்திருந்தனர்.

கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்ட இந்த இளைஞனின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து செல்வதாக பிரதேசம் முழுவதும் கட்டுக்கதை பரவ ஆரம்பித்துள்ளது.

எனினும் அந்த பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை மலர் சாலைக்கு கொண்டு செல்லும் போது, வாகனம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது அந்த இடத்தில் மண் வெட்டியுடன் சிலர் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

இந்த இரண்டு சம்பவத்தையும் பார்த்த மக்கள், இளைஞனின் சடலத்தை தோண்டி எடுத்து செல்வதாக கூறியுள்ளனர்.

சம்பவத்தை கேட்டவுடன் அந்த ஊர் மக்கள் அனைவரும் கல்லறையை நோக்கி சென்று குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் சற்று பதற்றமாக சூழல் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. பின்னர் உண்மை நிலை தெரியவந்தவுடன் கூட்டம் கலைந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.