கொழும்பிலுள்ள கழிவுகளை அகற்ற நாளொன்றுக்கு இத்தனை மில்லியன் ரூபா செலவா?

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள கழிவுகளை புத்தளம் அருவக்காலு திண்மக்கழிவு மீள்சுழற்சி பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக நாளாந்தம் 50 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு நகர சபையின் பிரதி மேயர் இக்பால் தெரிவித்துள்ளார்.

ஒரு லொறியில் 10 முதல் 12 மெட்ரிக் டன் கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன. குறைந்த பட்சம் 50 லொறி கழிவுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்டுகிறது.

இந்த கழிவுகளை கொண்டு செல்லும் ஒரு லொறிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய 50 லொறிகளுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.