அமைச்சர் நவீன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Report Print Sumi in சமூகம்

அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவதற்காக அங்கு சென்றுள்ள அவர் யாழ்.நாகவிகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்தவகையில், அமைச்சரின் யாழ் விஜயத்தை ஞாபகப்படுத்தும் முகமாக நாக விகாரை வளாகத்தில் தென்னைமரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்.நாகவிகாரையின் விகாரதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை அமைச்சர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன்போது, விகாரையின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.