திருகோணமலையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாலும், கடல் கொந்தளிப்பு காரணமாகவும் மீனவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தமக்கு அரசாங்கம் மானியம் மூலம் உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.