சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம்! மக்களுடன் ஒர் கருத்து கணிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

சிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுப்பவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் என அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் அம்பாறை மாவட்ட மக்களிடம் எமது ஊடகவியலாளர் கருத்துகணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போதே பொதுமக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள்,

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள தலைமைகள் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் திட்டங்களுக்கும் இன்றுவரை கிடப்பிலேயே கிடக்கிறது. சிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து யார் உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுக்கிறார்களோ அவர்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம். அது யாராக இருந்தாலும் இதுவே எங்கள் நிலைப்பாடு.

ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிந்திருக்கின்றோம்.

தந்தையைப் போன்றே மகன் சஜித் பிரேமதாச மக்களுக்கு நல்ல ஒரு நிம்மதியான ஆட்சியை கொடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் விரக்தியிலிருந்த மக்கள் புதியதொரு நிம்மதியான ஆட்சியை எதிர்பார்த்த அந்தவேளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியும் மக்களுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers