இலங்கையில் கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டு பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை பொலிஸ் பிரிவின் மடிஹ கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 30 வயதான சீனாவை சேர்ந்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீனப் பெண் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, அலையில் சிக்கி மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

Latest Offers