உடன் அமுலுக்கு வரும் வகையில் முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Report Print Aasim in சமூகம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொடக்கம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரையான 50 முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

மருத்துவர் ஷாபியின் விவகாரத்தில் முறைகேடாக செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கந்தளாய் பிரதேச பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் பெற்றுள்ள மஹிந்த திசாநாயக்கவின் வெற்றிடத்துக்கு கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஜயசிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சீ.ஐ.டி.க்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலஹமுல்லை திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பீ.கே.டி. பிரியந்த அதற்கு மேலதிகமாக சீ.ஐ.டி.க்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர பொலிஸ் ஊடக மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

இவ்வாறாக முக்கிய பொலிஸ் அதிகாரிகள் ஐம்பது பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.