பஸில் தலைமையிலான குழு உருவாக்கியுள்ள மாற்றத்தின் பேரழிவு: நாளை முதல் காட்சிப்படுத்தப்படும்

Report Print Rakesh in சமூகம்

2015ஆம் ஆண்டு ஆட்சி அரச மாற்றத்தால் வந்த விளைவுகளை காட்டும் 30 நிமிட விவரணக் குறும்படம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

அதன் பெயர் 'மாற்றத்தின் பேரழிவு.'

இந்த விவரணக் குறும்படத்தில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல், ஐ.நா தீர்மானங்கள், மைத்திரி - ரணில் மோதல்கள், பிணைமுறி மோசடிகள், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த விவரணக் குறும்படம் கடந்த வாரம் மொட்டுக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்குக் காட்டப்பட்டதோடு அதன் டி.வி.டி. பிரதிகள் மொட்டுக் கட்சி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், நாளை முதல் இந்த விவரணக் குறும்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இப்படியான குறும்படங்களை மஹிந்த தரப்பு தயாரித்துக் காட்சிப்படுத்த இருந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராகக் களமிறங்கியமையால் மஹிந்த தரப்புக்குப் பல கோடி ரூபா பணம் வீணானது என்பது குறிப்பிடத்தக்கது.