NEPL சீசன் 2 கால்பந்தாட்ட போட்டிகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அனுமதி

Report Print Malar in சமூகம்

தமிழ் கால்பந்தாட்ட மன்றம் ஒழுங்கு செய்துள்ள NEPL சீசன் 2 கால்பந்தாட்ட போட்டிகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

2019 NEPL சீசன் 2 கால்பந்தாட்ட போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. 2018ஆம் ஆண்டு சீன் 1 NEPL கால்பந்தாட்ட போட்டிகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அனுமதி வழங்கியதுடன் அந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.

NEPL சீசன் 2 போட்டிகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு கடந்த ஜூலை 21ஆம் திகதி அனுமதி வழங்கியதுடன் அப்போது மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர் ஞானராஜ் கலந்துக்கொண்டதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தீர்மானத்தின் பேரில் NEPL கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், NEPL சீசன் 2 போட்டிகளுக்கு விளையாட மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் லீக்கினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த போட்டிகளில் மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிகளில் கால்பந்தாட்ட வீரர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க வேண்டும் எனவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் மன்னார் கால்பந்தாட்ட லீக் கழகத்திற்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers