கொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! 10000 வீடுகளுக்கு மின்சார தடை

Report Print Vethu Vethu in சமூகம்
115Shares

கொழும்பின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஹுனுபிட்டியவில் மின்சார வழங்கும் தூண் மீது மரம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிரிபத்கொட மற்றும் அதனை சுற்றியுள்ள 10000 வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் காற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மின்சாரத்தை விரைவில் வழங்கும் நோக்கில் அதனை சீர் செய்யும் நடவடி்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.