திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் மோட்டார்சைக்கிளொன்றும், முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த ஹர்ஷ டி சில்வா (வயது 21) மற்றும் நிலுக்க சாமர (வயது 23) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெவித்துள்ளனர்.

அதிக வேகமும், கவனயீனமுமே விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.