இரணைமடு குளத்தில் சட்டவிரோத இறால்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இறால்பிடியில் ஈடுபட்ட 6 பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தில் இன்று பகல் 7 பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை, ஏனைய ஆறு பேரையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோகிராம் நிறையுடைய இறால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளூர் உற்பத்தி கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டதுடன், அவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்ப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers