இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ரஷ்யா

Report Print Steephen Steephen in சமூகம்

ரஷ்யா, இலங்கை இராணுவத்திற்காக விசேட பயிற்சி திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ரஷ்ய இராணுவத்தின் பிரதான கட்டளை அதிகாரியான ஒலேக் சாலியுகோவ்வை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் பலனாக அடுத்த வருடம் இலங்கை இராணுவத்தை சேர்ந்த 70 பேருக்கு பயிற்சி வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது.

அதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் எப்படி இருக்கின்றது என்பது குறித்தும் இராணுவ தளபதி, ரஷ்ய இராணுவத்தின் பிரதான கட்டளை அதிகாரியான ஒலேக் சாலியுகோவ்வுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவத்தினருக்கு பயற்சியளிப்பதற்காக ரஷ்ய இராணுவ ஆலோசகர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.