தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரொருவருக்கு கொலை மிரட்டல்

Report Print Mohan Mohan in சமூகம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் என்பவருக்கு சமூகவலைத்தளம் ஒன்றினூடாக (முகநூல்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த சமூகவலைத்தளத்தை (முகநூல்) இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரிடம் பொலிஸார் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகவலைத்தளம் ஒன்றினூடாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்துள்ள நிலையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers