மட்டக்களப்பில் பூட்டியிருந்த தொழிற்சாலையில் தீப்பரவல்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு ஐஸ் தொழிற்சாலையொன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த ஐஸ் தொழிற்சாலை நீண்டகாலமாக கைவிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி காடுகள் மண்டி காணப்பட்ட நிலையில் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.