வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி புகையிரத வீதி வழியாக சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று ஆதி விநாயகர் ஆலய குளக்கட்டு வீதியில் திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers