வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் நான்காவது நாள் ஆட்டங்களில் வெற்றிவாகை சூடிய அணிகள்

Report Print Kanmani in சமூகம்

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்றுள்ளன.

குறித்த போட்டி நிகழ்வு கிளிநொச்சி உருத்திரபுரம் மைதானம், வவுனியா நகரசபை மைதானம், யாழ். துரையப்பா மைதானம் போன்ற மூன்று மைதானங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி உருத்திரபுரம் மைதானத்தில் கிளியூர் கிங்ஸ் ஐ எதிர்த்து தமிழ் யுனைட்டட் அணி விளையாடியது.இதில் 2:2 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமமான கோல்களை பெற்று சமநிலையில் உள்ளன.

வவுனியா நகரசபை மைதானத்தில் மன்னார் எப்சியை எதிர்த்து முல்லை பீனிக்ஸ் அணி விளையாடியுள்ளது. இதில் முல்லை பீனிக்ஸ் அணி 1:0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றுள்ளது.

யாழ். துரையப்பா மைதானத்தில் வல்வை எப்சியை எதிர்த்து றிங்கோ டைட்டான்ஸ் அணி விளையாடியுள்ளது.இதில், வல்வை எப்சி 8:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.