தௌஹீத் அடிப்படைவாதிகளின் புதிய நடவடிக்கை! குறிவைக்கப்படும் 10 ஆயிரம் விகாரைகள்?

Report Print Jeslin Jeslin in சமூகம்

தௌஹீத் அடிப்படைவாத அமைப்பினர் இந்நாட்டிலுள்ள 10 ஆயிரம் விகாரைகளுக்கு அல்குர்ஆன் பிரதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர் என பயங்கரவாத எதிர்ப்பு தேசிய கூட்டணியின் உறுப்பினர் ரிஸாம் அரூஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைப்பினால் இன்றையதினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தௌஹீத் அடிப்படைவாதிகளின் புதிய நடவடிக்கையாக இந்த குர்ஆன் பிரதி வழங்கும் நிகழ்வு அமையவுள்ளது. இதனை இரகசியமான முறையில் விநியோகிப்பதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக 37 லட்சம் ரூபா நிதியை அவர்கள் சேகரித்துள்ளனர்.

இந்த குர்ஆன் பிரதியை விநியோகிக்க அவர்களிடம் நடுத்தர சிந்தனையில் உள்ள குழுவொன்று உள்ளது. இவர்களில் பௌத்த மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களும் காணப்படுகின்றனர்.

இத்தகையவர்களில் விகாரைகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணுவோரும் உள்ளனர்.

இது தொடர்பான அவர்களது குரல் பதிவுகளும் என்னிடம் உள்ளன, அதனால் பொறுப்புடன் இந்த அறிவிப்பை விடுக்கின்றேன்.

இந்த குர்ஆன் பிரதிகளை இரண்டு மாதத்துக்குள் விநியோகித்து முடிக்கவுள்ளனர், இந்த குர்ஆன் பிரதிகள் இந்தியாவின் கல்கத்தாவிலிருந்து வரவுள்ளன, அங்குள்ள பீ. ஜெய்னுலாப்தீன் என்பவரிடமிருந்தே இவை பெற்றுக் கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.