கொழும்பு குப்பை பிரச்சினை தீவிரமடையும் அபாயம்

Report Print Aasim in சமூகம்

கொழும்பு நகரில் குவியும் குப்பைகளை அகற்றும் பிரச்சினை தீவிரமடையும் அறிகுறிகள் வௌித் தோன்றியுள்ளன.

கொழும்பில் சேகரிக்கப்படும் குவிந்துள்ள அறுவக்காடு கழிவகற்றல் நிலையத்தில் கொட்டும் நடவடிக்கை வௌ்ளிக்கிழமை இரவு தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக கொழும்பு நகர கழிவுகள் 17 டிப்பர் வாகனங்களில் அறுவக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை மேலும் 7 டிப்பர் வாகனங்களில் அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்திற்கு கழிவுகள் கொண்டுசெல்லப்பட்டதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் கழிவுகளை மீள்சுழற்சிப்படுத்தல் மற்றும் தரம் பிரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கான கட்டமைப்புகள் உரிய முறையில் தாபிக்கப்படாத நிலையில் அறுவக்காடு கழிவகற்றல் நிலையத்தில் குப்பைகளை தொடர்ந்தும் ​சேகரிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers