நள்ளிரவில் இருவர் கொடூரமாக சுட்டுக்கொலை

Report Print Vethu Vethu in சமூகம்

குருணாகலில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொல்கஹாவலயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளையின் போது இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அத்துடன் அங்கியிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிய 27 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers