வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்

Report Print Sumi in சமூகம்

காரைநகர் - பொன்னாலை சந்தி பால பகுதியில் இன்று காலை டிப்பர் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

மணல் ஏற்றிய டிப்பர் வாகனமே காரைநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் டிப்பரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதன்போது நன்னீர் குழாயொன்று உடைத்து தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers