சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ். பொலிஸார் வேண்டுகோள்

Report Print Sumi in சமூகம்

அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்ட குறித்த முதியவரின் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

5 அடி 3 அங்குல உயரம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க இந்த முதியவர் சாரம் அணிந்து காணப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கங்களான 021222 2222 அல்லது 0213211258 என்பவற்றுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest Offers