திருகோணமலையில் கொந்தளிப்பான நிலையில் கடல்! பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் நீராடுவதற்கு பொருத்தமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், வேறு இடங்களில் நீராட வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

நிலாவெளி கடற்கரை மற்றும் திருகோணமலை நகரசபை கடற்கரை, அலஸ் தோட்டம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

நீராடும் வரை பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தாம் விரும்பிய இடங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதனால் திருகோணமலை கடற்கரைகளில் பொலிஸாரின் "உயிர் பாதுகாப்பு" படைவீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers