நாவற்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹஜ்ஜி பெருநாளுக்காக இன்று அதிகாலை 5 மணியளவில் ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்கு கோழியை ஏற்றிச் சென்ற லொறி, எதிரில் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னால் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் ஒரு டயர் வெடித்து, வாகன திடீரென வீதியில் நின்றுள்ளது. பின்னால் வேகமாக வந்த லொறி, டிப்பரில் மோதியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers