விக்னேஸ்வரனால் துடுப்பாட்ட போட்டி ஆரம்பித்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடைய தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதான அனுசரணையில் நடாத்தபடும் “இளைஞர் எழுச்சி கிண்ணம்” துடுப்பாட்ட சுற்றுப்போட்டி சி.வி. விக்கினேஸ்வரனால் இன்றையதினம் காலை வவுனியா கற்பகபுரம் நியூவண் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி இருந்தது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, கட்சியின் யாழ் , மாவட்ட முக்கியஸ்ரான அருந்தவபாலன், மற்றும் பொது அமைப்பினர், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers