மட்டக்களப்பிலிருந்து தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை ஆரம்பம்

Report Print Kumar in சமூகம்

நாட்டில், அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரையொன்று இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வறட்சி நிலையினால் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் நீரில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் விலங்குகளும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் வறட்சியை போக்க மழை பொழிய வேண்டுமென பிரார்த்தித்து குறித்த பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தியான் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த புனித பாதயாத்திரை வலையறவு, குறிஞ்சாமுனை, வாழைக்காலை மற்றும் பனையறுப்பான் ஆகிய பகுதிகள் ஊடாக சென்று தாந்தாமலை முருகன் ஆலயத்தை நாளைய தினம் சென்றடையவுள்ளது.

Latest Offers