பாழடைந்த வீட்டில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை - செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த 52 வயதுடைய உசனார் ராஹிலா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் குறித்தபெண்ணுடைய சகோதரனின் மகன் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers