முல்லைத்தீவு - செஞ்சோலை மாணவர்கள் படுகொலை நினைவு தூபி தொடர்பில் பொலிஸார் விசாரணை

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களை நினைவு கூறும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுதாக்குதலுக்கு இலக்காகி 54 பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர்.

இவர்களுடைய 13ஆவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், இவர்களுடைய நினைவை சுமந்து வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் பாரிய நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.

உரிய அனைத்து திணைக்களங்களின் அனுமதி பெறப்பட்டு குறித்த நினைவு தூபி அமைக்கப்பட்ட போதும், நினைவுத் தூபியில் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

குறித்த பணிகளை முன்னெடுத்தவர்களை இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest Offers