வவுனியாவில் கோயில் வாசலில் காத்திருந்த முன்னாள் முதலமைச்சர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவிற்கு வருகை தந்த வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஆலய வாசலில் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக இன்று காலை சி.வி.விக்னேஸ்வரன் வருகை தந்திருந்தார்.

வவுனியா, தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு விசேட பூஜைகளைத் தொடர்ந்து அவரை நான்காம் கட்டை வரை ஊர்வலமாக அழைத்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக சி.வி.விக்னேஸ்வரன் 9.15 மணிக்கே குறித்த ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட கட்சி அமைப்பாளரும், ஆதரவாளர்களும் அவ்விடத்திற்கு உரிய நேரத்திற்கு வருகை தராமையால் ஆலய வெளிவாசலில், காரில் அமர்ந்திருந்தபடி சுமார் 30 நிமிடங்கள் சி.வி.விக்னேஸ்வரன் காத்திருக்க வேண்டியிருந்தது.

எனினும், கட்சி அமைப்பாளர் நீண்ட நேரமாக வராத போதிலும், அவர் இன்றியே முன்னாள் முதலமைச்சருக்கான பூஜை நடைபெற்றுள்ளது. பூஜை முடிந்த பின்னரே அமைப்பாளர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers