இத்தாலியிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு சென்று தன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விசாரணையில் வெளியான தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

விவாகரத்து கொடுக்காததால், மனைவி மீது கோபம் கொண்ட இலங்கையரான கணவன், இத்தாலியில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

அவரை சைப்ரஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் தொழில் புரிந்து வரும் 46 வயதான இலங்கை நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான பெண் படுகாயமடைந்த நிலையில், சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த இலங்கை பெண் நீண்டகாலமாக சைப்ரஸ் நாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.

சந்தேக நபரான கணவன் நீண்டகாலமாக தனது மனைவியிடம் விவகாரத்தை கோரி வந்ததுடன் மனைவி விவாகரத்து கொடுக்காததால் மனைவியுடன் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நபர் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி இத்தாலியில் இருந்து சைப்ரஸ் சென்று மனைவி தொழில் புரியும் இடத்திற்கு சென்று மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக் குத்துக்கு உள்ளான பெண்ணின் முகத்திலும் வயிற்று பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் தனது மனைவி தொழில் புரியும் இடத்திற்கு செல்ல மற்றுமொரு இலங்கை பெண், சைப்ரஸ் ஆண் ஒருவரும் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியை கத்தியால் குத்தி விட்டு இத்தாலிக்கு தப்பி செல்லும் நோக்கில், சைப்ரஸின் லார்னகா விமான நிலையத்தில் காத்திருந்த போது, கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், லிமாசோல் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

Latest Offers