கொழும்பு குப்பைப் பிரச்சினை நாளைக்குள் தீர்க்கப்படும்?

Report Print Aasim in சமூகம்

கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை நாளைக்குள் முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த சில நாட்களாக குவிந்து காணப்பட்ட குப்பைகளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் புத்தளம் அருவாக்காடு பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று மீள்சுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பின் பல பிரதேசங்களிலும் தொடர்ந்தும் மலைபோல் குப்பைகள் குவிந்திருப்பதாக ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள நகர ஆணையாளர் பாலித நாணயக்கார, நாளை தினத்துக்குள் கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

குப்பைககளை அகற்றும் நடவடிக்கைக்காக நாளொன்றுக்கு 25லட்சம் ரூபா அளவில் செலவிடப்படுவதாகவும், மாதமொன்றுக்கு சுமார் ஏழு கோடி ரூபா அளவில் செலவிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers