ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மலையகத்தில் கண்டி, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.