தலைக்கவசம் அணியாது சென்றவர்களை வேடிக்கை பார்த்த வவுனியா பொலிஸார்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா ஏ9 வீதியில் தலைக்கவசம் அணியாது ஊர்வலமாக சென்ற மோட்டர் சைக்கிள்களை போக்குவரத்து பொலிஸார் மறித்த போதும், அவை நிறுத்தாமல் சென்றபோது போக்குவரத்து பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் வருகை தந்துள்ளார்.

இதன்போது கட்சி ஆதரவாளர்கள் அவரை மோட்டர் சைக்கிளில் பவனியாக அழைத்து சென்றுள்ளனர்.

வவுனியா, தாண்டிகுளம் முருகன் ஆலய முன்றலில் இருந்து மன்னார் வீதி நான்காம் கட்டை வரை குறித்த மோட்டார் சைக்கிள் பவனி இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணித் தலைவர் உள்ளிட்ட சிலர் மோட்டர் சைக்கிளில் தலைகவசம் அணியாது பயணித்துள்ளனர்.

ஏ9 வீதி புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிள் பவனியை அவதானித்து தலைகவசம் அணியாது சென்றவர்களை வழிமறித்துள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாது சென்றுள்ளனர்.

இதன்போது வாகனம் ஒன்றில் வந்த பிரமுகர் குறித்த இளைஞர்கள் முன்னாள் முதலமைச்சரை அழைத்துச் செல்வதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன்போது போக்குவரத்து பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர்.

Latest Offers