செஞ்சோலை மாணவர்கள் படுகொலை நினைவு தூபி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு-வள்ளிபுனம் வளாகத்தில் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுதூபி பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகி 51 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 54 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் நினைவாக வள்ளிபுனம் பகுதியில் நினைவு வளைவு ஒன்று அமைக்கும் பணிகளை முன்னெடுத்திருந்த நினைவேந்தல் குழுவினரிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிக்காக பிரதேசபையினால் வழங்கப்பட்ட அனுமதி கடந்த 31.07.19 ஆம் திகதி காலவதியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த அனுமதியை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் மீண்டும் பெற்றுக்கொள்ளும் வரை நினைவுதூபி அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் என்பனவற்றை நினைவு தூபி வளாகத்தில் காட்சிப்படுத்தும் அனுமதி பொலிஸாரினால் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers