புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் தீர்த்தக்கேணி அமைக்கும் ஆரம்ப நிகழ்வு வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிகள் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமின் சிபாரிசில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசாவின் கம்பெரலிய பகுதி 02 திட்டத்தில் 2,00,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்தீர்த்தக்கேணியின் பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டார பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் க.கேதீஸ்வரன், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்களேன பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers