வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கும், துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மகறூப் ஆகியோர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று கிண்ணியா அல்அதான் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் தங்களது வெளிவாரி பட்டங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்பன தொடர்பாக பிரதியமைச்சரிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மகறூப் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட 16800 உள்வாரி பட்டதாரிகளுக்குள் 800 பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் மிகுதியான பட்டதாரிகள் விரைவில் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதற்கான ஆரம்ப கட்டமாக 8000 நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செயலாளர் வீ.சிவஞானசோதி ஆகியோர்களை சந்தித்து இது விடயமாக கூறியுள்ளேன் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் வெளிவாரி என்ற பாரபட்சமின்றி அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர், கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் நிஹ்மத்துள்ளா உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers