100 வருடம் பழைமையான ஆலமரம் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் சேதம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன நாகவத்தை தோட்டத்தில் சுமார் 100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்த ஆல மரத்தின் கிளையொன்று நேற்று இரவு முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.

குறித்த வீடுகளில் வாழ்ந்த 29 பேர் அத்தோட்டத்தில் உள்ள பாலர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது இடம் பெயர்ந்தவர்களில் 13 சிறுவர்கள் 15 பெரியவர்களும் அடங்குகின்றனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் 100 வருடத்திற்கும் மேல் பழைமை வாய்ந்த தொடர் குடியிருப்பில் தான் வாழ்ந்து வருகின்றோம். அந்த குடியிருப்பில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான ஆலமரமொன்று உள்ளது.

ஆகவே எங்களுக்கு அந்த மரத்தினை வெட்டி அகற்றும் வரை நாங்கள் இந்த இடத்தில் தான் இருப்போம். எங்களுக்கு எங்கள் பிள்ளைகளின் உயிர் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers