வவுனியாவில் விசேட தேவையுடையோரை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - வரோட், தாய்மடி இல்லத்தில் தங்கியிருக்கும் விசேட தேவையுடையோரை வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் நேற்று மாலை 6 மணியளவில் விசேட தேவையுடையோரின் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

விசேட தேவையுடையோரை பராமரிக்கும் அருட்தந்தையர்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டனியின் வவுனியா அமைப்பாளர் செ.சிறிதரன், இளைஞரணி தலைவர் கிறிஸ்ண மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers