வவுனியா - பாவற்குளம் பகுதியில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, பாவற்குளம் பகுதியில் இருந்து நேற்று மாலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாவற்குளத்திலிருந்து உலுக்குளம் நோக்கி காணப்படும் குளக்கட்டு பகுதியினூடாக பயணித்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டிருந்த ஆயுதங்களை அவதானித்து தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கைக்குண்டு ஒன்றும், ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என நீதிமன்ற அனுமதியுடன் இன்று விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers